விலைக்கு வாங்க:
http://bit.ly/aspabharat
என்ற சுட்டிக்குச் சென்று வாங்கிக் கொள்ளலாம்.
அல்லது மேற்கண்ட சுட்டியில் தற்போதைய விலையைப் பார்த்துவிட்டு
ZERO DEGREE PUBLISHING,
Account No. 602805020541 | IFSC code: ICIC0006028
Branch...68, CP Ramaswamy Road, Chennai-600018
என்ற வங்கிக் கணக்கில் மேற்கண்ட சுட்டியில் கண்ட தற்போதைய தொகையைச் செலுத்திவிட்டு, சீரோ டிகிரி பதிப்பகத்தாரின் கைபேசி எண் +91 - 9840065000க்கு உங்கள் முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பி கொரியர் மூலம் பெற்றுக் கொள்ளலாம். வெளிநாடுகளில் வசிப்போர் இப்புத்தகத் தொகுப்பை வாங்க விரும்பினால் மேற்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கொரியர் கட்டணம் எவ்வளவு என்பதைத் தெரிந்து கொண்டு, மொத்தத் தொகையை மேற்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
ஒருவரை ஒருவர் காணாமல் காதலித்து, இடைஞ்சல்களுக்குப் பிறகு திருமணமும் செய்து கொண்டு, இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்து, காலத்தின் கோலத்தால் நாட்டையும், செழிப்பையும் இழந்து, காட்டுக்கு விரட்டப்பட்டு, கணவன் மனைவி இருவரும் பிரிந்து, ஆளுக்கொரு திக்குக்குச் சென்று, தனித்தனியே அல்லல்பட்டு, ஒருவரை ஒருவர் காணாமல் வாடி, பிள்ளைகளை நினைத்து உருகி என அன்பையும், துயரையும், காதலையும் பின்னிப் பிணைந்து தன்னுள் கொண்டதுதான் இந்த நள தமயந்தி கதை. இக்கதையின் முடிவில், இதைப் படிப்பதனால் உண்டாகும் பலனை முன்னறிவிக்கிறார் முனிவர் பிருஹதஸ்வர். அவர், "நளனின் இந்த உயர்ந்த வரலாற்றைத் திரும்பத் திரும்பச் சொல்பவனையோ, சொல்லும்போது கேட்பவனையோ தீயூழ் ஒருபோதும் அண்டாது. இந்த அற்புதமான தொல்வரலாற்றைக் கேட்பவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், விலங்குகள், இடம், உடல்நலம், மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெறுவதோடு, தனது காரியங்கள் அனைத்திலும் வெற்றியையும், புகழையும் நிச்சயம் ஈட்டுவான். இதில் எள்ளளவும் ஐயமில்லை" என்று சொல்லியிருக்கிறார்.