29 Jan 2013

விஸ்வரூபம் - கமல் - இஸ்லாம் | சினிமா / டிவி

சினிமா / டிவி: விஸ்வரூபம் - கமல் - இஸ்லாம்: இதுவரை கமல் செய்யும் புரட்சிகளை நாம் விமர்சன எண்ணத்துடனேயே பார்த்திருக்கிறோம் (டிடிஎச் உட்பட).

அவரை இஸ்லாமியார்கள் நண்பராகவே நாம் இதுவரைக் கண்டிருக்கிறோம். மருதநாயகம் டிரெய்லரைப் பார்த்தால் எந்த ஒரு இஸ்லாமியாரும் அவரை ஆரக்கட்டித் தழுவிக் கொள்வார்கள். என்னைப் போன்றோர் அச்சத்துடனேயே பார்த்தோம். அவர் மேல் அப்போதும் சிலருக்கு விமர்சனம் இருந்தது. மர்மயோகியும் அதுபோலத்தான் என்றார்கள்.


Oh my God என்ற ஒரு இந்திப் படம், அதில் வில்லனாக வரும் மிதுன் சக்ரவர்த்தி அப்படியே நித்தியானத்தாவைப் பிரதிபலிக்கிறார். இன்னும் பல பல திரைப்படங்கள் இந்து மதத்தையும் இன்னும் பிற மதங்களையும் தாக்கித் தான் வந்து கொண்டிருக்கின்றன. எல்லா படமும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். அது அவரவர் கருத்து சுதந்திரம்.
இது கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் அறைகூவல். இந்த நவீன தீவிரவாதத்தை எதிர்கொள்ள ஒட்டுமொத்த தமிழகமும், ஏன் தமிழகம்? ஒட்டுமொத்த இந்தியாவும் கமலுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.
   

என்னதான் கமலுக்கு ஆதரவாக இருக்க விரும்பினாலும் பிளாஷ்பாக் ஒன்றுகூட கமலுக்கு ஆதரவாக இல்லை. மேலும் படிக்க

25 Jan 2013

குருட்டுப்பார்வை...?கடுமையான நோய்க்கு உள்ளான இருவர், மருத்துவமனையில் ஒரே அறையில் இருந்தனர்.

அதில் ஒரு மனிதர் ஒவ்வொரு மதியமும் ஒரு மணி நேரம் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து நுரையீரலில் கட்டியிருக்கும் சளியை எடுக்க அனுமதிக்கப்பட்டார்.

கட்கரி-காங்கிரஸ்-சர்வாதிகாரம்

ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சித் தலைவரின் பேச்சாக இல்லை கட்கரியின் "வருமான வரித்துறையை மிரட்டும்" பேச்சு.

பெரிய ஊழல் புகார்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை எளிதாகக் கையாண்டு, தனது கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச்செல்லாமல், இப்படிப் பேசி இவரது கட்சியின் வெற்றி வாய்ப்பை இவரே கெடுத்துக் கொள்வது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

22 Jan 2013

ஷிண்டேவும் தீவிரவாதமும்திடீரென உள்துறை அமைச்சர் ஷிண்டே "இந்து தீவிரவாதம்" குறித்து கவலைப்பட என்ன காரணம் இருக்க முடியும்? எல்லையில் பதட்டமாக இருக்கக்கூடிய இத்தருணத்தில் இந்த அறிவிப்பு. அதுவும் இந்திய நாட்டின் உள்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட இந்தக் கருத்து யாருக்குப் பயனுள்ளதாக இருக்கும்?

இன்று இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. மும்பை குண்டுவெடிப்பில் தேடப்படும் முக்கிய தீவிரவாதி, ஜமாத்-உத்-தவா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவனான ஹபீஸ் சையத் நமது உள்துறை அமைச்சரின் வாசகத்தையே கோடிட்டுக் காட்டி "உலக நாடுகள் இந்தியாவை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்" என்று கேட்கிறான்.

21 Jan 2013

புத்தனாக இருக்கலாம்! அநியாயத்துக்கு புத்தனாக?மரண தண்டனை கூடாது. அது மனிதாபிமானமற்ற செயல். கொலைக் குற்றங்களுக்கும் தனிமைச் சிறை ஆயுள் முழுவதும் வழங்கலாம். மேற்கண்ட கருத்து, பொது அரங்கில் மீண்டும் இப்போது உலா வருகிறது. 

2005ம் ஆண்டு, தன்னாட்டில் வாழ வழியில்லாத காரணத்தால், வீட்டு வேலை செய்வதற்காக  இலங்கையைச் சேர்ந்த ரிசானாநபீக் என்ற இளம் பெண், சவுதிக்குச் சென்றாள். அவள் பணி செய்த அந்த வீட்டிலே சமையல் செய்வது, வீட்டு வேலைகளை செய்து, வீட்டு முதலாளியின் நான்கு மாதக் குழந்தையைப் பராமரிப்பது ஆகிய பணிகளை முறையாக நிறைவேற்றி வந்தாள். ஆனால் அந்த நான்கு மாதக் குழந்தையை இளம்பெண் ரிசானாநபீக் கொலை செய்தார்

11 Jan 2013

பாகிஸ்தானும் அக்பருதீன் ஒவைசியும்ஒரு நாட்டின் எல்லையை ஊடுருவுவதே மிகப் பெரியத் தவறு. அப்படி ஊடுருவி போர் புரிகையில், எதிரி நாட்டு ராணுவத்தினரின் சடலத்தில் இருந்து தலையை வெட்டிக் கொண்டுப் போதல் என்பது தீவிரவாதிகள் பாணியாக இருக்கிறது. இது ஒரு கொடூரமான செயல். பாகிஸ்தான் ராணுவத்தின் கோர முகத்தை இது உலகத்துக்கு காட்டுகிறது.

பாகிஸ்தான் ராணுவமே தீவிரவாத ராணுவமாக செயல்படுகிறது. ஒரு ஜனநாயக நாட்டின் ராணுவம் இப்படி நடந்து கொள்வது கீழ்த்தரமானது.

9 Jan 2013

தமிழ் இனியது

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி


- இது 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிலேடைக் கவி காளமேகம் அவர்கள் செய்யுள்.மேற்கொண்ட செய்யுளை இப்படிப் படிக்க வேண்டும்.

தாதி தூதோ தீது தத்தை தூது ஓதாது
தூதி தூது ஒத்தித்த தூததே - தாது ஒத்த
துத்தி தத்தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்தது ஓதித் திதி

8 Jan 2013

கொஞ்சி கொஞ்சிப் பேசி மதிமயக்கிடில்லி பாலியல் வன்கொடுமை நிகழ்ச்சிக்குப் பிறகு பலதளங்களில் விவாதப்பொருளாகிவிட்டது பெண் பாதுகாப்பு, ஆண்-பெண் சமத்துவம் ஆகியன. மீடியாவும் யார் வாயையாவது பிடுங்கி, இவர் ஆணின் துணையில்லாமல் பெண் செல்வது தவறு என்று கூறுகிறார் என்று கதறுகிறது. உடனே ஒரு பெரிய போராட்டம், கொடும்பாவி எரிப்பு என்று பற்றி எரிகிறது ஊர்.

குற்றத்திற்குக் காரணமானோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த பெண் பாதுகாப்பு குறித்த விவாதங்களில் ஈடுபடும் போது, பெண்ணை எப்படிப் பாதுகாப்பது என்பதும் விவாதப் பொருளாகிறது. பெண்ணை எப்படிப் பாதுகாப்பது? நவநாகரிக ஆடை என்ற பெயரில் பெருமளவு உடலைக் காண்பித்து நடக்கும் பெண்ணை எப்படிப் பாதுகாப்பது? நாங்கள் எப்படியும் அணிவோம், அது எங்கள் பிறப்புரிமை. நீங்கள் ஆணாதிக்கப் பார்வையில் பார்க்கிறீர்கள் என்றால் என்ன சொல்வது.