19 Apr 2012

அம்பேத்கர்! கம்யூனிசம்!!

தோழர் ஒருவர் எனக்கு இப்படி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்
அம்பேத்கர் குறித்து பெரியார்
”அவர்(அம்பேத்கர்) சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும்பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங்கினார். எப்படிப்பட்டவரும் எடுத்துச் சொல்ல பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம் வெகு சாதாரணத் தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்“.
இந்து மதம் என்பதான ஆரிய – ஆத்திக மதக் கோட்பாடுகளை வெகு அலட்சியமாகவும்ஆபாசமாகவும்அர்த்தமற்றதாகவும் மக்கள் கவரும்படியாகப் பேசியும் எழுதியும் வந்தார்.
“காந்தியாரையே ஒரு பத்தாம்பசலிபிற்போக்குவாதி என்றும்அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டு வந்த கீதையை "முட்டாள்களின் உளறல்கள்என்றும் சொன்னதோடுகாந்தியாரின் கடவுளான ராமனை மகாக் கொடியவன் என்றும்ராமாயணக் காவியம் எரிக்கத் தக்கது என்றும் சொல்லிபல்லாயிரக்கணக்கான மக்களிடையில் ராமாயணத்தைச் சுட்டு எரித்துச் சாம்பலாக்கிக் காட்டினார்.
 ("விடுதலை', 8.12.1956, வே. ஆனைமுத்து (பதிப்பாசிரியர்), பெரியார் .வெ.ரா. சிந்தனைகள், 1934).
அதன்பிறகு அவருக்கு எனக்கும் நடந்த விவாதத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

7 Apr 2012

திருவொற்றியூர்! வடசென்னை!


இன்று எனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, வடசென்னையின் நிலைமை, குறிப்பாக, திருவொற்றியூரின் நிலைமை பற்றி பேச்சு வந்தது.
"திருவொற்றியூர்தான் சார்! சென்னையின் குப்பைத்தொட்டி" என்றார் நண்பர்.
"ஏன் சார்! அப்படி சொல்றீங்க!" என்றேன்.
"பாருங்களேன். ஒரு வளர்ச்சித் திட்டமாவது திருவொற்றியூருக்கென்று செய்கிறார்களா? திருவொற்றியூர் போகட்டும், வடசென்னையில் எங்காவது வளர்ச்சிப் பணிகள் எந்த காலத்திலாவது நடந்திருக்கிறதா?" என்றார்.
"என்ன சார் சொல்றீங்க! இப்பகூட ரோட்ட அகலப்படுத்த ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்றினாங்களே!"

4 Apr 2012

தாயகம் காப்பது கடமையடா


ஒரு நணபர் வந்தார். அவர் ஒரு மலையாளி. பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது "ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்று பல பேர் பேசக் கேட்டிருப்பீர்களே! அதன் அர்த்தம் தெரியுமா?'' என்றார்.
நான் சொன்னேன் "சாவு ஆறு வயதிலும் வரும், நூறு வயதிலும் வரும். பாரபட்சம் பார்க்காது. வந்தே தீரும் அதுதானே அர்த்தம்" என்று.

1 Apr 2012

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்


ஒரு நாள் ஒரு மலையாளி நண்பர் என் அலுவலகத்திற்கு வந்தார். தன் மகனுக்கு ஒரு பயோ-டேட்டா அடிக்க வேண்டும் என்றார். அதை நான் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போதே, அவர் "இன்னும் சில வேலைகள் உள்ளன. என்னுடைய சில வீடுகளுக்கு சிலர் வாடகைக்கு வந்துள்ளனர். அதற்கான ஒப்பந்தங்களைத் தட்டச்சு செய்ய வேண்டும்." என்றார்.
"சரி சார்! கண்டிப்பாக நான் தட்டச்சு செய்து தருகிறேன்" என்றேன்.
"இப்போது கவர்மெண்ட், ஒரு Form-ஐக் கொடுத்து வாடகைக்கு வந்திருப்பவர்களின் விபரங்களை நிரப்பித் தருமாறு கேட்கின்றனர்" என்றார்.
நான் "அப்படியா சார்! எதற்காக அப்படிக் கேட்கின்றனர்" என்றேன்.
"இப்போதுதான் ஆங்காங்கே திருட்டுகள் நடக்கின்றனவே." என்றார்.