உழைப்புச் சுரண்டல் – எங்கே?

“முதலாளித்துவம் என்பதன் அடிப்படையே லாப வேட்டை, அதற்கான உழைப்புச் சுரண்டல், இயற்கை வளக் கொள்ளை ஆகியவைதான்” என்றுதான் தோழர்கள் நினைக்கிறார்கள். இதுவே ஒரு கம்யூனிச நாடாக இருந்தால் இவையெல்லாம் இருக்காதா என்ன? கம்யூனிச அரசாங்கங்கள் மனிதர்களைச் சுரண்ட மாட்டார்களா? இயற்கை வளங்களை கொள்ளையடிக்க மாட்டார்களா? ஐயோ உயிரையேச் சுரண்டிவிடுவார்களே! அப்புறம் எங்கிருந்து உழைப்பைச் சுரண்டுவது? காடாக…

பைக் பார்க்கிங்

ஒரு முரட்டு மனிதர் அந்த பள்ளியின் காம்பொண்டுக்குள் டூ வீலரை ஓட்டிச் சென்றார். பள்ளி விடும் நேரம் அது. ஆகவே, பெற்றோர் வரிசையாக தங்கள் தங்கள் வண்டிகளுடன் வரிசையில் சென்று கொண்டிருந்தனர். அவரும் தன் பேத்தியை அழைத்துப் போகவே வந்திருந்தார். வண்டியை பொறுமையாக ஓட்டிச் சென்று வாகனம் நிறுத்துமிடத்தில், குழந்தையை அழைத்து வந்தவுடன் சிரமப்படாமல் உடனே…

வளையுமா பகுத்தறிவு நாவு?

நக்கீரன் இதழில் திரு.சுப.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய “இளமை எனும் பூங்காற்று” தொடரின் 26வது கட்டுரை “அழகின் மறுபெயர்” படித்தேன். அது ஏழாம் கிளியோபாத்ரா பற்றிய ஒரு கட்டுரையாகும். ஆரம்ப வரியிலேயே சிந்திக்கத்தான் வைக்கிறார் பகுத்தறிவுக்காரர், “தாய்வழிச் சமூகமாக இருந்த வாழ்க்கை முறை மாறிப்போன பிறகு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண்களின் ஆதிக்கமே உலகில் நிலைத்து நிற்கிறது என்று…

கம்யூனிச பொன்னுலகம்

 முன்பு ஒரு நாள், நான் ஒரு தோழரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, “ஜனநாயகம் என்ற பேரில் முதலாளிகள் வாழ்கின்றனர். தொழிலாளர்கள் சாகின்றனர். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாகின்றனர்.” என்றார். “இந்த நிலை மாறணும்னா, என்ன செய்யணும் தோழர்” என்றேன். “புரட்சி வெடிக்க வேண்டும். கம்யூனிசம் ஜெயிக்க வேண்டும். அப்போது மேடு பள்ளம் இல்லாத சமூக…

அந்நிய மதங்கள் சிறுபான்மையா?

       ஒரு நண்பருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது, சிறுபான்மை சமூகத்தினருக்கான உள் ஒதுக்கீடு பற்றிப்பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நண்பர் சொன்னார், “என்னதான் ஒரு தலித் மதம் மாறினாலும் அவனது சமூக அந்தஸ்தோ, சமூக மரியாதையோ அல்லது எந்த விதத்திலும் அவன் உயர்ந்துவிடவில்லை. ஆகவே, அவன் மதம் மாறினாலும் அவனுக்கான ஒதுக்கீடு அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் சிறுபான்மையினருக்கான…

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்

ஒரு நாள் ஒரு மலையாளி நண்பர் என் அலுவலகத்திற்கு வந்தார். தன் மகனுக்கு ஒரு பயோ-டேட்டா அடிக்க வேண்டும் என்றார். அதை நான் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போதே, அவர் “இன்னும் சில வேலைகள் உள்ளன. என்னுடைய சில வீடுகளுக்கு சிலர் வாடகைக்கு வந்துள்ளனர். அதற்கான ஒப்பந்தங்களைத் தட்டச்சு செய்ய வேண்டும்.” என்றார். “சரி சார்! கண்டிப்பாக…

பொதுவுடைமை! தனியுடைமை

        எனது நண்பர் ஒருவர் அச்சக உரிமையாளர். அவர் என்னை அலைபேசியில் அழைத்தார். “என்னவென்று” கேட்டேன். “ஒரு நண்பருக்கு ஒரு மென்பொருள் நிறுவித் தர வேண்டும்” என்று கேட்டார். நான் “ஆகட்டும் சார்! இன்னும் பத்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன்.” என்றேன்.         சிறிது நேரம் கழித்து நான் அவர் அச்சகத்திற்குச் சென்றேன். அங்கே அவரது நண்பர்…