11 Jun 2013

யாரிந்த மோடி?

எங்கு கேட்டாலும் மோடி... மோடி.. என்றே பேசுகிறார்களே! யாரிந்த மோடி?

இணையத்தில் தேடியபோது நிறைய எதிர்வாதக் கருத்துகள் கிடைத்தாலும், தினகரனில் வந்திருந்த ஒரு கட்டுரை அவருக்கு ஆதரவாக இருந்தது.

தமிழ்நாட்டில் (மீடியாக்களில்) மோடிக்கு ஆதரவு கிடைப்பதென்பது அரிதான விஷயமே! இருப்பினும் ஒரு திராவிட ஏடான தினகரனிலேயே மோடிக்கு ஒரு அப்ளாஸ் கிடைத்திருப்பது சாதாரண விஷயமில்லை.


கீழ்வரும் கட்டுரை தினகரனில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் இல்லாத ஒரு விஷயம், சென்ற குஜராத் தேர்தலில் அவரை எதிர்த்து வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்ய காங்கிரசுக்கு கிடைத்த ஒரே விஷயம். "மோடி திருமணமானர். மனைவியைப் புறந்தள்ளிவிட்டார். குஜராத்திலேயே அவரது மனைவி ஆசிரியப் பணியாற்றித் தனிமையில் ஏழ்மையில் வாடுகிறார்." என்பது தான். மோடி மூன்று முறை அரசாண்டிருந்தும் ஒரு கலவரத்தைத் தவிர வேறு எந்தக் கலவரத்தையும் அவர்களால் எடுத்துக் காட்ட முடியவில்லை. தொழில் வளர்ச்சிக் குறியீடு போலியானது! போலியானது!! என்று சொன்னார்களே ஒழிய, மத்திய அரசின் தொழில் வளர்ச்சிக் குறியேடே காங்கிரசின் வாதம் பொய் என்பதைச் சொன்னது.

மேற்கண்ட செய்தியைப் படித்ததும். மோடி பிரம்மச்சாரி என்று நினைத்தோமே, அவர் இப்பேர்ப்பட்ட தில்லாலங்கடியா என்று இணையத்தில் தேடினால். பாலியத்தில் குழந்தை திருமண முறையில் மணக்கப்பட்டவராம் அந்த மாது. மோடி தனக்கு 19 வயது ஆகும்போது, திருமணத்தில் விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டாராம். குழந்தை திருமணம் செய்த பிறகு, இருவரும் தனித்தனியே, தங்கள் தங்கள் தகப்பனார் வீடுகளில் வசித்திருக்கின்றனர். சரியான வயது வரும் போது, அவர்களை இணைத்து வைக்க பெரியவர்கள் முயன்ற போதே, அவர் அதில் விருப்பம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். ஆகையால் காங்கிரசிற்கு கிடைத்த ஒரே பிடியும் ஒடிந்து விழுந்தது.

வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, மின்சாரம், சூரிய ஒளியால் கிடைக்கும் மின்சாரம், மது ஒழிப்பு, நகர நிர்மாணம், கல்வி, பெண் சிசுக்கொலையைத் தடுப்பது, பெண் கல்வி ஆகிய துறைகளில் மோடியின் குஜராத் பல படிகள் முன்னேறிய வந்திருக்கிறது. 

பெரும்பாலும், தமிழ் ஊடகங்கள் நாடுதழுவிய செய்திகளுக்கு அதிமுக்கியத்துவம் கொடுப்பதில்லை. மோடி என்றால் மதவாதி, பா.ஜ.க. காரர் அவ்வளவு செய்தியை மட்டுமே மக்களுக்குக் கொடுக்கின்றன. ஒரு சில பார்ப்பன ஆதிக்க ஊடகங்களே பா.ஜ.க. சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். ஆனால் திராவிட ஊடகமான தினகரன் மோடிக்கென்று ஒரு கவர் ஸ்டோரி தயார் செய்து, அதிலும் அவருக்கு ஆதரவான கருத்தகளை இட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே!

இனி. தினகரனிலிருந்து....

1950ம் ஆண்டு செப்டம்பர் மாதம், குஜராத்தின் வத்நகரில், தாமோதரதாஸ் மூல்சந்த் மோடி , ஹீராபென் என்ற விவசாய தம்பதியின் 3வது மகனாக பிறந்தவர் மோடி.

குடும்பத்தில் கடுமையான வறுமை நிலவியதால், அவரது மூத்த சகோதரர் டீக்கடை ஒன்றை போட்டார். அதில் மோடியும் அவரது சகோதரர்களும் வேலை பார்த்தனர். டீ கிளாஸ்களை கழுவி சுத்தமாக வைப்பது மோடியின் பணிகளில் ஒன்று.  டீ கிளாஸ்களை மிக சுத்தமாக கழுவி துடைத்து வைத்துவிடுவார் மோடி. இந்தக் கடையில் வேலை பார்த்துக் கொண்டே அவர் பள்ளிப்படிப்பையும் முடித்தார். பள்ளி நேரத்தை தவிர பெரும்பாலான நேரத்தில் கடையில்தான் இருக்க வேண்டும். இரவு 11 மணிக்கு பின்னர் கொஞ்ச நேரம் படிப்பதற்கு நேரம் கிடைக்கும். இந்த நேரத்தில்தான் அவர் படித்துக் கொள்ள வேண்டும். 1960ம் ஆண்டு நடுப்பகுதியில் இந்தியா , பாகிஸ்தான் போர் நடந்தது. அந்த 10 வயதிலேயே ரயில் நிலையத்தில் ராணுவ வீரர்களுக்கு உதவும் தன்னார்வ தொண்டு பணியை செய்தார். 1967ல் குஜராத்தை வெள்ளம் பாதித்தபோதும் இரவு, பகல் பாராமல் மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டார். இதற்கு எல்லாம் அடித்தளமாக இருந்தது, அவர் இணைந்திருந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்புதான். கஷ்டப்பட்டு பள்ளிப்படிப்பை முடித்த மோடி, குடும்பத்தினரிடம் கெஞ்சிக்கூத்தாடி கல்லூரியில் சேர அனுமதி வாங்கினார்.

கல்லூரியில் அவர் எடுத்துக் கொண்ட படிப்பு எம்.ஏ. அரசியல். சிறுவயதில் இருந்தே மோடியிடம் ஒரு பிடிவாத குணம், எதையும், எதிலும் போராடி பார்த்துவிடுவது என்பதுதான். எல்லோரும் ஒரு விஷயத்தை சாதாரண கோணத்தில் பார்த்தால் மோடி மட்டும் மாறுபட்ட கோணத்தில் இருந்து அதை பார்த்தார். கல்லூரி படிப்பில் முதுகலை அரசியல் பாடம் படித்த மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் இணைந்து பணியாற்றினார். அவரது அபார உழைப்பு, போராட்ட குணம், எதிலும் பின்வாங்காத தன்மை ஆகியவற்றை பார்த்து பிரசாரகர் பதவியை கொடுத்து அழகு பார்த்தது அந்த அமைப்பு. நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, தலைமறைவு வாழ்வு வாழ்ந்து அதை எதிர்த்து போராடினார் மோடி. 1987ல் முதல் முறையாக அரசியல் நீரோட்டத்தில் அவர் இணைந்தார். பா.ஜ.வில் இணைந்த மோடி, குஜராத் மாநிலம் முழுவதும் அதன் வளர்ச்சிக்காக பாடுபட்டார். அவரது அபாரமான நடவடிக்கைகளை பார்த்து வியந்த தலைமை, அடுத்த ஒரு ஆண்டிலேயே அவரை கட்சியின் மாநில செயலாளராக ஆக்கியது. 1995ல் குஜராத்தில் நடந்த தேர்தலில் மோடியின் வியூகத்தினால், பா.ஜ. செல்வாக்கு பெற்றது.

1987 , 1995 இடைப்பட்ட காலத்தில் மோடி மிகப்பெரிய ராஜதந்திரி என்பதை பா.ஜ. மட்டுமின்றி குஜராத்தும் புரிந்துக் கொண்டது. அத்வானியின் ரத யாத்திரை வெற்றிகரமாக நடத்தி தந்தது மோடிதான். ரத யாத்திரையில் கிடைத்த செல்வாக்கால், 1998ல் பா.ஜ. மத்தியில் ஆட்சியை பிடித்தது. மோடியை நன்கு பயன்படுத்திக் கொள்ள நினைத்த பா.ஜ தலைமை அவருக்கு கட்சியின் தேசிய செயலாளர் பதவியை அளித்தது. மேலும், 5 மாநிலங்களின் கட்சிப் பொறுப்பையும் அவரிடம் அளித்தது. அந்த இளம் வயதில் மோடியைத் தவிர வேறு யாருக்கும் இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை பா.ஜ. தரவில்லை. இந்த சமயத்தில்தான் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. குஜராத்தில் எந்தெந்த வேட்பாளர்களை நிறுத்தினால் வெற்றிவாகை கிடைக்கும் என்பதை ஆராய்ந்து சரியான வேட்பாளர்களை தேர்வு செய்து தேர்தல் களத்துக்கு அனுப்பி வைத்தார். அவர் எதிர்பார்த்தபடி, குஜராத்தில் பா.ஜ. ஆட்சியை பிடித்தது. கேசுபாய் படேல் முதல்வராக பொறுப்பேற்றார். குஜராத்தை மிகப்பெரிய பூகம்பம் புரட்டிப்போட்டது. நிவாரணப் பணிகளை முதல்வர் பதவியில் இருந்த கேசுபாய் படேல் சரியாக முடுக்கிவிடவில்லை என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. கட்சியின் செல்வாக்கு சரிவதை பார்த்த பா.ஜ. தலைமை கேசுபாய்க்கு பதில் யாரை அந்த பொறுப்புக்கு நியமிக்கலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டது. முதலும் கடைசியுமாக அந்த வாய்ப்பில் இருந்த ஒரே நபர் மோடிதான். ஆனால், இளம்வயது, அனுபவமின்மை என்று பல காரணங்களை சில வயது முதிர்ந்த தலைவர்கள் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கூறினர்.

திறமை அற்றவர்; அவரை துணை முதல்வராக்கலாம் என்று அத்வானி கூறினார். பொறுப்பை கொடுத்தால், முழுமையாக கொடுங்கள். அதில் தோல்வியுற்றால் பின்னர் பேசுங்கள் என்று மோடி தடாலடியாக ஒரு போடுபோட்டார். அனுபவமிக்க தலைவர்கள் மோடியின் கருத்தில் இருந்த உண்மைக்கு சலாம் போட்டனர். அவரை முதல்வராக ஆக்கியது பா.ஜ.க. ஆனால், ஒரு ஆண்டிலேயே பா.ஜ. ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது. குறுகிய பதவிக்காலத்திலேயே மோடி செய்த சாதனைகள் பலப்பல. முதலாவதாக அவர் செய்தது, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள்தான். பூகம்பம் பாதித்த பகுதிகளில் அடிப்படை வசதிகள் கிடைக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதையும் பார்த்த மக்கள் மீண்டும் அவரது தலைமையிலான ஆட்சிக்கு வாக்குகளை அள்ளி, அள்ளித்தந்தனர். மீண்டும் அமோகமாக வெற்றிப்பெற்று ஆட்சியை பிடித்தார் மோடி. அன்றிலிருந்து இன்று வரையில் அவரது வளர்ச்சி வேகத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. வளர்ச்சி என்பது சாதாரணமாக வந்துவிடாது. இதற்கு அவர் பாடுபட்டது ஏராளம். இன்று குஜராத் மாநிலம் தொழில் வளர்ச்சியில் மிகச்சிறப்பான இடத்தை பிடித்துள்ளதற்கும் காரணம் இதுதான். சமீபத்தில் நடந்த குஜராத் மாநில தேர்தலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் அவரை எப்படியும் வீழ்த்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டன. காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி முதல் மன்மோகன் சிங் வரையில் பறந்து, பறந்து சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். மோடியின் பலம் என்றால், அது அவரது சாதனைகள்தானே. 3வது முறையாகவும் மோடி ஆட்சியைப் பிடித்தார். மோடிக்கு முஸ்லிம்கள் ஓட்டுபோட மாட்டார்கள் என்று தீவிர பிரசாரம் நடந்து வந்த நிலையில், முஸ்லிம்களும் அவர்களது வாக்குகளை அவருக்கு வாரி வழங்கினர். அப்போதே அவரை பிரதமர் பதவிக்குரிய வேட்பாளராகவும், பா.ஜ. தொண்டர்கள் மட்டுமின்றி மக்களும் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவரான ராகுல் காந்திதான் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் பதவி வேட்பாளராக முன் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ. தேசிய செயற்குழு கூட்டத்தில், மோடிக்கு கட்சியின் உயரிய பதவியான பிரசாரக்குழு தலைவர் பதவியை கொடுப்பது என்று பெரும்பாலான தலைவர்கள் முடிவு செய்தனர். இதை அறிந்துக் கொண்ட அத்வானி, அந்த கூட்டத்துக்கு செல்லவில்லை. அவரது ஆதரவாளர்களும் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். நாடு சென்று கொண்டிருக்கும் வேகத்தில், இன்னமும் பழைய கருத்துகளுக்கு இடம் அளிப்பது சிறப்பாக இருக்காது என்பதை புரிந்து கொண்ட ராஜ்நாத் சிங், பல்வேறு எதிர்ப்புகளையும் புறந்தள்ளி, இப்பதவிக்கு மோடியின் பெயரை அறிவித்தார். மேன் மக்கள் மேன் மக்களே என்பது பழமொழி. பெரிய பதவிக்கு அறிவிக்கப்பட்ட அடுத்த விநாடியே, மோடி செய்த முதல் காரியம் அத்வானியிடம் பேசியதுதான். மோடியின் செல்வாக்கு கூடி வருவது, அவரது கட்சித் தலைவர்களின் எதிர்ப்பிலேயே உணர முடிகிறது. அடுத்து வரும் மக்களவை தேர்தல், இளம் தலைவரை உயர்ந்த பதவிக்கு கொண்டு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சோஷியல் மீடியாவில் உச்சத்தில் மோடி:

பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் எங்கு பார்த்தாலும் இப்போது நரேந்திர மோடியை பற்றிய பேச்சுதான்.
ஆரம்பத்தில் மோடியை அனுபவமில்லாதவர், திறமையற்றவர் என்றெல்லாம் காரணம்காட்டி அவரை ஒதுக்க நினைத்தார்கள். ஆனால், அதெல்லாம் பொய் என நிரூபித்து, சீனா கண்டு வரும் வளர்ச்சியை போல், குஜராத்தின் அபார வளர்ச்சிக்கு வித்திட்டார் மோடி. தொழில்வளர்ச்சியில் எல்லா மாநிலங்களையும் ஒருபடி பின்னுக்கு தள்ளி முன்னேறிக் கொண்டிருக்கிறது குஜராத். தேசிய வளர்ச்சி புள்ளிவிவரம் அதற்குச் சிறந்த உதாரணம்.
இதையடுத்து, இந்த கோஷம் எடுபடாது என்று நினைத்தவர்கள், மோடிக்கு எதிராக மதவாத கோஷத்தை எடுத்துக் கொண்டனர். மோடி ஒரு தரப்புக்கு மட்டுமே ஆதரவானவர் என்று பிரசாரம் செய்தனர். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில், அதையும் பொய் என்று நிரூபித்து காட்டினார் மோடி. காரணம், முன்னெப்போதும் இல்லாத வகையில், முஸ்லிம்களின் ஆதரவுடன் அவர் பெரும் வெற்றி பெற்றார். இப்போது மோடிக்கு எதிராக வேறு என்ன கோஷத்தை எடுக்கலாம் என்று எதிராளிகள் சிந்தித்துக் கொண்டிருப்பதாக டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். சீனாவுக்கு ஈடாக இந்தியாவை வல்லரசாக ஆக்க மோடியை போன்ற தலைவரால் தான் முடியும் என்று பல தரப்பினரும் உணரத்துவங்கி விட்டனர். வெறும் வாய்ஜால வாக்குறுதிகளால் இனி மக்களை  ஏமாற்ற முடியாது. அடுத்த நிமிடமே, சோஷியல் மீடியாக்களில் விமர்சிக்கப்படும் நிலை உருவாகி விட்டது. இந்த வகையில் மோடிக்கு இதில் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சோளப்பொரியை போட்டு திமிங்கலம் பிடித்தவர்

எங்கு ஒருவருக்கு வேலை இருக்கிறதோ, அங்கு வெட்டிப் பேச்சுகள் இருக்காது என்பது சீன பழமொழி. அதைதான் என்னுடைய பணியாக கொண்டுள்ளேன் என்று மோடி அடிக்கடி கூறுவது வழக்கம். இதன் எதிரொலியாக தன்னுடைய மாநிலத்தில் தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவர் எடுத்தார். மேற்குவங்க மாநிலத்தில் இருந்து டாடா கார் தயாரிப்பு நிறுவனம் துரத்தியடிக்கப்பட்டபோது, பலகோடி வரிச்சலுகைகளையும், ஏராளமான நிலங்களையும் அளித்து, அதை தன்னுடைய மாநிலத்துக்கு மோடி கொண்டு வந்தார். மோடியின் ராஜதந்திரம் அங்குதான் வேலை செய்தது. சோளப் பொரியை கொடுத்து, திமிங்கலத்தை அவர் பிடித்தது இப்போதுதான் எல்லா மாநிலங்களுக்கும் புரிய வருகிறது.

டாடா தொழிற்சாலை மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது. டாடா நிறுவனமே இடம் மாறிவிட்ட பின்னர் தங்களுக்கு என்ன வேலை என்று பல குட்டி நிறுவனங்கள், தாங்களாகவே, பசுவின் பின்னால் செல்லும் கன்றுகளை போன்று குஜராத் மாநிலத்துக்கு இடம் பெயர்ந்தன.மின்தட்டுப்பாடு என்பது இப்போது எல்லா மாநிலங்களிலும் சாதாரண விஷயமாகிவிட்டது. ஆனால், குஜராத்தில், மின்தடை என்ற பேச்சே யாருக்கும் தெரியாது.

அந்த அளவுக்கு மின்னுற்பத்தியில் உபரி மாநிலமாக திகழ்கிறது குஜராத். இதிலும் மோடியின் ராஜதந்திரம்தான். 10 தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்தால், ஒரு மின்னுற்பத்தி நிலையத்துக்கு திட்டம் தீட்டுவது அவரது வழக்கமாக இருந்தது. சூரிய மின்சக்தியை பெருக்குவதற்கும் பெருமளவில் நடவடிக்கை எடுத்துள்ளார். கிராமங்களில் பொது விளக்குகளுக்கு மின்சாரம் தருவது சூரிய மின்சக்தி பேனல்கள். ஆரம்பத்தில் இதற்கான செலவு அதிகமாக தெரிந்தாலும், பின்னாளில் அதன் பலன் மிக அதிகம் என்பதை மோடி உணர்ந்திருக்கிறார்.

நன்றி: தினகரன் 11.06.2013

9 comments:

 1. http://thamizhoviya.blogspot.in/2013/06/blog-post_12.html

  http://thamizhoviya.blogspot.in/2013/06/blog-post_11.html

  ReplyDelete
  Replies
  1. மேலே உள்ள மறுமொழியில் தமிழ் ஓவியா அவர்கள் மோடி அவர்களைக் காரிக் காரித் துப்பியிருக்கிறார். கொலைகாரர் என்கிறார். ஹிட்லர் என்கிறார். கோத்ரா என்கிறார், குஜராத் கலவரம் என்கிறார்.

   கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை திராவிடத் திருவாளர்கள் தமிழகத்தில் எப்படி மாற்றிச் சொல்லியிருக்கிறார்கள் என்பதைக் காண விக்கியின் இந்தப் பகத்திற்குச் செல்லவும்.

   தமிழ் ஓவியா அவர்களாவது கோத்ரா, குஜராத் கலவரம், என்று மோடியைத் தொட்டுவிட்டு, பிறகு மாலேகான், சம்ஜௌதா, பெஸ்ட் பேக்கரி என்று சென்று விடுகிறார்.

   ஆனால், இரு மாதங்களுக்கு முன் நான் தட்டச்சு செய்து கொடுத்த இதழ் ஒன்றில் நிறைய கருத்துகள் மோடியை எதிர்த்து இருந்தன. அந்த இதழுக்கும் வலைப்பூ தொடங்கியிருக்கிறோம். அதில் அந்தக் கட்டுரையைக் காண இங்கே செல்லுங்கள்.

   அந்தக் கட்டுரையின் கீழ் எனது மறுமொழிகளும் இருக்கும்.

   இதற்கு முன் தமிழ் ஓவியா அவர்களுடன் நமக்கு ஏற்பட்ட ஒரு முரணைக் காண இங்கே செல்லவும்.

   நீண்ட நாட்கள் கழித்து தமிழ் ஓவியாவுடன் மீண்டும் பிணக்கு. நல்ல வேளை தனிப்பட்ட முறையில் என்னைக் கடிந்து கொள்ளவில்லை அவர். அந்த வகையில் தப்பித்தேன்.

   Delete
 2. ஒரு கலவரத்தை தவிர? அந்த ஒரு கலவரம் சுதந்திர இந்தியாவின் அனைத்து கலவரங்களையும் தூக்கி சாப்பிட்டு விட்டது. பாம்பு தான் தன் பசிக்கு தன் குட்டியைச் சாப்பிடும். அந்த வழி வந்தவன் தான் இந்த அயோக்கியன் மோடி. புராஜெக்ட் கோத்ரா மூலம் குஜராத்தை சிறுபாண்மையினருக்கெதிரான பரிசோதனைக் கூடமாக்கியவன் இவன். ஒரே சிந்தனை உள்ள உங்களுக்கு மோடி குறித்து யாரும் குறை சொன்னால் தப்பாகத்தான் இருக்கும். பாரத் காவிக்கு ஜெ!

  ReplyDelete
 3. நண்பரே!

  சுதந்திர இந்தியாவின் அனைத்துக் கலவரங்களையும் தூக்கி சாப்பிட்டது குஜராத் கலவரம் என்று சொல்கிறீர்ள். உங்களுக்கு சுதந்திர இந்தியாவில் நடந்த படுகொலைகளையும், கலவரங்களையும் குறித்த பட்டியல் வேண்டுமா?
  http://en.wikipedia.org/wiki/Massacres_in_India என்ற இந்த லிங்குக்குச் சென்று பாருங்கள்.

  எத்தனை கலவரங்கள் நடந்தன. அதில், யார் யார் பாதிக்கப்பட்டார்கள். யார் அந்தக் கலவரத்துக்கெல்லாம் மூலகர்த்தா என்பதும் தெரியும்.

  குறிப்பாக, இந்த வரியைப் பாருங்கள், Ethnic cleansing of Hindu Pandits in 1990s in Kashmir, 219-399 Hindus were killed and 140,000 to 192,000 Hindus were forced to abandon their ancestral land.

  கோத்ரா ரயில் எரிப்பில் யார் இறந்தார்கள் என்று தெரிய வேண்டுமா? http://news.bbc.co.uk/2/hi/south_asia/4536199.stm என்ற லிங்குக்குச் சென்று பாருங்கள்.

  அதற்கு பிறகு நடந்ததே நீங்கள் குறிப்பிடும் கலவரம். அக்கலவரத்தினால் பலியாடாக நின்றார் மோடி. கலவரத்திற்கு உண்மையான காரண கர்த்தா யார்?

  நான் மேலே கொடுத்திருக்கும் விக்கியின் லிங்கில் சுதந்திரத்திற்கு முன்பு நடந்த Mass Killings-ஐப் பற்றியும் கொடுத்திருக்கிறார்கள். பாருங்கள். அந்தப் பட்டியல் யாரை விரல் நீட்டிக் காட்டுகிறதென்று!

  நண்பரே! பாரதம் என்றால் காவி மட்டும் அல்ல. காவியும், வெண்மையும், பச்சையும் சேர்ந்ததே பாரதம். நான் மூன்று நிறத்திற்கும் ஜே வைப்பவன்தான். ஆனால், ஒரு நிறத்தை மற்றொரு நிறம் விழுங்கும் போது மட்டுமே அதைச் சுட்டிக் காட்டுகிறேன்.

  மனிதனை மதத்தால் பிரித்துப் பார்ப்பது முட்டாள்த்தனம். அவனுக்கு ஒரு மத அடையாளம் கொடுத்து அவனை ஒடுக்கும்போது, அதைக் கண்டிப்பது தன் மத அடையாளத்தைக் காட்ட அல்ல.

  ஒரு மனிதன் தனது மாநிலத்தை நல்ல வளர்ச்சிக்கு இட்டுச் சென்றிருக்கிறான். அவனை நாட்டை வழிநடத்த அழைத்தாலென்ன? இன்னும் அழைக்கக்கூட இல்லையே, அதற்குள் ஏன் இத்தனை எதிர்ப்பு? ஏன் இத்தனைக் கூப்பாடு?

  என் கருத்தை ஏற்பீர்களா? என்று தெரியவில்லை.

  இருப்பினும் வந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 4. காஷ்மீரை அடையாளம் காட்டுகிறீர்கள். முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழ்ந்த காஷ்மீரை ஹரிசிங் என்ற ஹிந்து மன்னர் எவ்வித பிரச்சினையும் இன்றி ஆட்சி செய்தார். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக சகோதரர்களாக வாழ்ந்தனர், எதுவரை தெரியுமா? உங்கள் காவி பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவும் வரை. இரு மத ஒற்றுமையை அதிகமாக வலியுறுத்திய மஹாத்மா காந்தியை கொன்று விட்டு அந்தப்பழியை இஸ்லாமியர்கள் மீது போட வேண்டும் என திட்டமிட்டு காந்தி கொல்லப்பட்டவுடன் ஏற்கனவே தயார்படுத்தப்பட்ட காவி பயங்கரவாதிகள் இஸ்லாமியர்களை அழிக்கத்துவங்குவார்கள். இதுதான் காவிகளின் திட்டம். இதேதான் குஜராத்திலும் அரங்கேறியது. குஜராத் கலவரம் 2002ல் நிகழ்த்தப்பட்டாலும் அதற்கான திட்டமிடுதல் பல ஆண்டுகளுக்கே முன்பே அயோக்கியன் மோடியின் குழு தயார் படுத்தியது. கோத்ரா ரயில் எரிவதற்கு பல மாதங்களுக்கு முன்பே காவி பயங்கரவாதிகள் தங்களின் ஆயுதங்களை பட்டை தீட்டியதை தெகல்கா தெளிவாக எடுத்துரைத்தது. அயோக்கியன் மோடியின் முகத்திரையை தெகல்கா கிழித்ததெல்லாம் உங்களுக்கு மறந்து போகவில்லை ஆனால் மறைக்கப்பார்க்கிறீர்கள், காவியை பச்சையா விழுங்குகிறது? அடப்பாவிகளா? பச்சையை அழிப்பதை குலத்தொழிலாகக் கொண்ட உங்களைப் போன்ற காவி பயங்கரவாதிகள் ஒழிந்தாலே போதும், இந்தியாவில் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை தழைத்தோங்கும்.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே! இது என்ன நல்ல கதையால்ல இருக்கு! இஸ்லாமியர்களே அற்று இருந்த முழுமையான இந்து இந்தியாவை பாபர்களும் அக்பரும் கில்ஜிக்களும் கோரிக்களும் அவுரங்கசிப்புகளும் ஆண்டார்களே! அப்போது பெரும்பான்மை இந்துக்கள் வாழ்ந்த இந்தியாவை ஆண்டது அவர்களின் குற்றமா? காவி பயங்கரவாதிகள் எப்போது காஷ்மீரத்துக்குள் நுழைந்தார்கள் என்று சொல்கிறீர்கள்? பண்டிட்டுகள் காஷ்மீரத்தின் பூர்வக்குடிகள். இன்று பாகிஸ்தானில் இருக்கும் ஹரப்பாவும் மொஹஞ்சதாரோவும் வேத கால வரலாறை பறைசாற்றிக் கொண்டிருக்கும்போது, பாகிஸ்தான் ஆதியிலிருந்தே அரபு தெய்வத்தை வணங்கி வந்ததாக சாதிக்கிறதே பாகிஸ்தான்! அப்படித்தான் இப்போதும் காஷ்மீரைக் கொண்டாடுகிறார்கள் இஸ்லாமியர்களை. பழைய வரலாறுகளைப் புரட்டிப் பாருங்கள் நண்பரே!

   படுகொலைகளின் பட்டியலைப் பார்க்கும்படி கேட்டிருந்தேனே பார்த்தீர்களா? நான் சுட்டிக்காட்டியிருந்தது இந்தியாவில் நடந்தது மட்டுமே! வெளிநாடுகளில் என்று எடுத்துப் பாருங்கள். நீங்கள் யாருக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது புரியும். கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டிருக்கிறது என்று சொன்னால் இருண்டுதான் இருக்கும். ஆனால் அது உங்களைப் போன்றோருக்கு மட்டும்தான்.

   பார்த்தீர்களா! எடுத்துக்கொண்ட தலைப்பை விட்டு நழுவி எங்கெல்லாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று! இதுதான் மதவாதம்? எந்த ஒரு பிரச்சனையையும் மதம் சார்ந்து பார்க்காமல், மனிதம் சார்ந்து பார்த்தாலே போதும். பிரச்சனைகள் தானாய்க் களைந்து போகும். தீவிரவாதம் யார் செய்தாலும் தீவிரவாதம்தான்.

   இந்தப் பதிவுகளின் மூலமாக நான் யாரையும் குற்றம் சொல்லவே இல்லை. ஒரு திறமையான மனிதரை ஏன் முடக்க நினைக்கிறீர்கள் என்று கேட்கிறேன். மற்றபடி நான் பதிலுரைப்பதெல்லாம் உங்கள் கேள்விக்குத்தான். ஒரு மனிதரைப் பற்றி பதிவு போடுவதே காவிப்பயங்கரவாதம் என்றால்......! அக்கரையில் நடப்பதெல்லாம்....?

   Delete
 5. அம்மணமாய் திரிபவர்கள் கொவனான்டியைப் பார்த்து பைத்தியம் என்பானாம்

  ReplyDelete
 6. மத பயங்கரவாதம்,காவி தீவிரவாதம் என்று மோடி பற்றி காங்கிரஸ் எத்தனை மோடிமஸ்தான் வித்தைகளை காட்டினாலும், மோடி சிறந்த நிர்வாகி என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. பொருளாதார சூரப்புலி என்று பிம்பம் காட்டி சொங்கி பூனையை சிம்மாசனத்தில் ஏற்றி நாட்டின் பணமதிப்பையே பாதாளத்தில் வீழ்த்திய காங்கிரஸை மன்னித்த நாம் ஒரு முறை பாஜகவையும் மன்னித்து மோடிக்கு பிரதமர் வாய்ப்பை கொடுத்தால் என்ன தவறு.

  ReplyDelete
 7. இவனுங்களுக்கு இதேவேலைதான் இவர்கள் செய்த படுகொலை எல்லாம் கவனத்தில்இருக்காது அதையே மற்றொருவர் செய்தாள் 300 வருடத்திற்குஅதைப்பற்றியே பேசுவார்கள்

  ReplyDelete

நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.

கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.

சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.