8 Jan 2013

கொஞ்சி கொஞ்சிப் பேசி மதிமயக்கிடில்லி பாலியல் வன்கொடுமை நிகழ்ச்சிக்குப் பிறகு பலதளங்களில் விவாதப்பொருளாகிவிட்டது பெண் பாதுகாப்பு, ஆண்-பெண் சமத்துவம் ஆகியன. மீடியாவும் யார் வாயையாவது பிடுங்கி, இவர் ஆணின் துணையில்லாமல் பெண் செல்வது தவறு என்று கூறுகிறார் என்று கதறுகிறது. உடனே ஒரு பெரிய போராட்டம், கொடும்பாவி எரிப்பு என்று பற்றி எரிகிறது ஊர்.

குற்றத்திற்குக் காரணமானோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த பெண் பாதுகாப்பு குறித்த விவாதங்களில் ஈடுபடும் போது, பெண்ணை எப்படிப் பாதுகாப்பது என்பதும் விவாதப் பொருளாகிறது. பெண்ணை எப்படிப் பாதுகாப்பது? நவநாகரிக ஆடை என்ற பெயரில் பெருமளவு உடலைக் காண்பித்து நடக்கும் பெண்ணை எப்படிப் பாதுகாப்பது? நாங்கள் எப்படியும் அணிவோம், அது எங்கள் பிறப்புரிமை. நீங்கள் ஆணாதிக்கப் பார்வையில் பார்க்கிறீர்கள் என்றால் என்ன சொல்வது.


இரவு 9 மணிக்கு மேல், ஆண்களே ஒரு மோதிரமோ அல்லது ஆரமோ அணிந்து கொண்டு வெளியில் செல்ல முடியாத நிலைதான் இன்னும் பெருநகரங்களில்கூட இருக்கிறது. இரண்டாயிரம் ரூபாய் மோதிரத்திற்காக, விரலையே வெட்டி எடுத்துச் செல்லக் காத்திருக்கும் திருட்டுக்கும்பல் நாடு எங்கும் பரவியிருக்கிறது. ஆணுக்கு என்னவோ பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வைத்திருப்பது போலவும், பெண்ணுக்கு அந்தப் பாதுகாப்பு இல்லை என்பது போலவும் பேசுவது எந்த விதத்தில் நியாயம். இதில் வேறு, நான் புதுமைப் பெண், இப்படித்தான் உடையணிந்து கொண்டு செல்வேன் என்றால் யார் பாதுகாப்பு கொடுப்பது?

நான் சாலைவழி நடக்கும்போதெல்லாம் காணும் காட்சி,  இயர்போனைக் காதில் மாட்டிக் கொண்டு கொஞ்சிக் கொஞ்சி பேசிச் செல்லும் பெண்களும், அதைப் பார்த்து வயிறெரிந்து சிலரும், ரசித்துக் கொண்டு சிலரும் என பொதுமக்கள் செல்லும் காட்சி. அதில் வயிறெரிந்து செல்லும் வகை உண்மையில் சமுதாயம் சீரழிந்து போகிறதே என்று வருந்தும் வகையினர். ரசிக்கும் கூட்டம்... ?

      இது ஆபத்தான கூட்டம். இதில் பல வகை உள்ளன. ஒரு சிலர், பரவாயில்லை வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் என்று ரசித்து விட்டுச் செல்கின்றனர். ஒரு சிலர் அந்தப் பெண் கொஞ்சும் அழகை ரசித்துச் செல்கின்றனர். ஒரு சிலருக்கு படுக்கையறைக் காட்சியை நேரடியாகப் பார்ப்பது போல் ரசித்துப் பார்க்கின்றனர். இதுவே பேராபத்தான வகை, இந்த வகையிலும் பல வகை உள்ளன. இதிலும், ஆபத்தற்ற ரசிகர் கூட்டம் உள்ளது. இருந்தாலும், அந்தக் கூட்டம் கூட ஒரு கட்டத்தில், வாய்ப்பு கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யும் வகைதான். இங்கே, ஆபத்தை வா... வா... என்று அழைப்பது யார்?

      சரி இப்படிப்பட்ட பெண்கள் அப்படி என்னதான் உலக அரசியலைப் பேசிவிடப்போகிறார்கள் என்று பார்த்தால், பல பெண்கள் பேசுவது அருகில் உட்கார்ந்திருக்கும் ஒருவருக்கே கேட்காது. அப்படியே, கேட்டு விட்டாலும், "அப்புறம், அப்புறம்" என்று தான் கேட்கும். இந்த அப்புறத்தால்தானே, அப்புறத்தில் மாட்டிக் கொள்ளும்போது சீரழிகிறார்கள்.

      பேருந்திலோ, ரெயிலிலோ அருகருகே உட்கார்ந்திருக்கும் காதலர்களைப் பாருங்கள். யார் அவர்களைப் பார்த்தாலென்ன என்ற தைரியத்துடன், சுற்றியிருக்கும் உலகையே மறந்துவிட்டு அந்தப் பொதுவாகனத்தையே படுக்கையறையாக்கி விடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து திட்டுபவன், பிற்போக்காளனாகவும், வயிற்றெரிச்சல் பிடித்தவனாகவும் பலருக்குத் தெரிகிறான். அப்படி அவன் திட்டும் போது, வலிய வந்து வக்காலத்து வாங்கி பகுத்தறிவு பேசுகிறானே, அவன் அனைவருக்கும் நல்லவனாகத் தெரிகிறான். அவன் ஏன் வக்காலத்து வாங்குகிறான்? ஒருவர் திட்டுவதால் அவனுக்குக் கிடைக்கும் இலவசக் காட்சி ரத்தாகிறதல்லவா?

இந்த இலவசக் காட்சியைக் கண்டு ரசிப்பவர்களில் ஒருவன்தான் காமக்கொடூரனாக மாறி இப்படிப்பட்ட ஒரு கொலைகாரனாக மாறுகிறான்.

வெட்டியாக பகுத்தறிவு பேசிக்கொண்டு, ஆணும் பெண்ணும் சமம் என்று வாதிட்டு, நவநாகரிக ஆடை என்ற பெயரில் அறைகுறை ஆடை அணிந்து கொள்வதற்கும், பொது அரங்கில் காதல் செய்வதற்கும் வக்காலத்து வாங்குவதால் பெண்களின் பாதுகாப்பு பலப்படும் என்று எப்படி ஏற்க முடியும்?

என்னதான் அறிவால் ஆணுக்குப் பெண் சமமாக இருந்தாலும், சில இடங்களில் ஆணின் பாதுகாப்பு அவளுக்குத் தேவைப் படுகிறது. அதிகமாக நகை அணிந்து செல்லும் போதோ, ஆள் அறவமற்ற பகுதிகளுக்குச் செல்லும் போதோ, ஒரு பொறுப்புள்ள (!) ஆணின் துணை கொண்டு செல்லுதலே பெண்களுக்குப் பாதுகாப்பானது. ஒவ்வொரு பெண்ணுக்கும் அரசாங்கம் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றால், அது நடைமுறைச் சாத்தியமல்ல.

பாதிக்கப்பட்ட பெண் ஆணின் துணையோடு சென்றுதானே அந்த நிலையை அடைந்தாள் என்று சீறுவோர்கள் அடைப்புக்குறிக்குள் ஆச்சரியக்குரி இட்டிருக்கும் வார்த்தையை அழுத்தமாக படியுங்கள்.

சரி ஆண்களுக்கு இதில் பொறுப்பேயில்லையா என்றால் உண்டு. பெண்கள் கவர்ச்சியாக உடை அணிந்து வருகையில் அதைப் பார்த்து நாம் ரசிக்காவிட்டால், நாம் ரசிப்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியாவிட்டால், அது அந்தப் பெண்ணுக்கும் நாம் கொடுக்கும் மரியாதை அல்ல என்று நினைக்கும் ஆண்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஆண்கள், 'அப்படிப் பார்ப்பது ஒழுக்கங்கெட்ட செயல். பெண்கள் அவர்களை நாகரிகமானவர்களாக காட்டவே அப்படி உடை அணிகிறார்கள். ஆண்களுக்குக் காட்டி மயக்க அல்ல' என்பதை உணர்ந்து பெண்களைத் தவறாகப் பார்க்காமல் இருந்தால் இப்படிப்பட்ட குற்றம் நடக்க வாய்ப்பே இல்லை. ஆனால், இப்படி ஒவ்வொரு ஆணும் நினைக்க வேண்டும். இது சாத்தியமா?

3 comments:

 1. /////'அப்படிப் பார்ப்பது ஒழுக்கங்கெட்ட செயல். பெண்கள் அவர்களை நாகரிகமானவர்களாக காட்டவே அப்படி உடை அணிகிறார்கள். ஆண்களுக்குக் காட்டி மயக்க அல்ல' என்பதை உணர்ந்து பெண்களைத் தவறாகப் பார்க்காமல் இருந்தால் இப்படிப்பட்ட குற்றம் நடக்க வாய்ப்பே இல்லை. ஆனால், இப்படி ஒவ்வொரு ஆணும் நினைக்க வேண்டும். இது சாத்தியமா?///////

  மிக அருமை

  ReplyDelete
 2. சட்டீஸ்கரின் உள்துறை அமைச்சர் கோள்களின் அமைப்புதான் இப்படிப்பட்ட கொடுமைகளுக்குக் காரணம் என்று சொல்லி இன்று மீடியாக்களின் வாயில் சிக்கியிருக்கிறார்.

  இதற்கு முன்பு அசோக் சிங்கால், மோகன் பகவத் மற்றும் ஏதோ ஒரு பாபா என்று பலர் வாயைப் பிடுங்கி மக்கள் வாய்களுக்கு அவல் கொடுத்தன மீடியாக்கள். இன்று சட்டீஸ்கரின் உள்துறை அமைச்சர்.

  ReplyDelete
 3. இளைஞர்களும் அவர்களின் சமூக அக்கறையும்

  இளைஞர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
  அதில் முதன்மையாக அவர்களின் பொருளாதாரம் இரண்டாவதாக குடும்பம்.
  மூன்றாவதாக அவர்களின் மூளையை மழுங்கச் செய்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அவர்கள் வாழ்க்கையை முறையை அமைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தும் ஆடம்பரம் மற்றும் உழைத்த களைப்பை போக்கும் என்று சொல்லக்கூடிய தன்னிலையை மறக்கச் செய்யும் பொழுது போக்கு.

  "வாழ்வதற்கு பொருள் வேண்டும் வாழ்ந்ததற்கும் பொருள் வேண்டும்".

  பொருள் மட்டுமே வாழ்க்கை என்று ஒரு தலைமுறை இளைஞர்கள் தவறாக வழிகாட்டப்பட்டு முன்னில் பாதியை விட்டு விட்டு வாழ்வதற்கு பொருள் வேண்டும் என்று வார்த்தெடுக்கப்பட்டனர்.

  அவ்வாறாக வளர்ந்த இளைஞர்கள் அடுத்த தலைமுறைக்கு சொல்லித்தந்த பாடம், "தான் வாழ பிறரை அழிக்கவும் தயங்காதே" என்றும் அது தவறில்லை என்பதற்கு இது தான் நியதி என்றும் எலி பிறர் பொருளை திருடித்தான் வலையில் சேர்க்கின்றது பாம்பு எலியைக் கொன்றுதான் உயிர் வாழ்கிறது இது போன்று ஒவ்வொரு உயிரினமும் ஒன்றை அளித்து தான் ஒன்று உருவாகிறது இதுதான் இயற்க்கை என்றும் தவறில்லை என்றும் போதித்தார்கள்.இப்படி வளர்க்கப்பட்ட இளைஞர்கள் எப்படியும் பொருள் சேர்க்கலாம் என்ற நிலைக்கு வரப்பெற்றார்கள்.

  உழைத்து சேர்த்த பொருளை யாருக்கும் செலவிடாமல் சேர்த்து வைக்கத் தெரிந்த தலைமுறை அதை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பொழுது தான் மேலை நாட்டு கலாச்சாரம் நம் இளைஞர்கள் மனதில் ஊடுருவ ஆரம்பித்தது. சம்பாதித்த பொருளை தானே அனுபவிக்க வேண்டும் என்ற மனதுடன் கூடிய மனிதாபிமானம் இல்லா இளைஞர்கள் உருவாக்கப் பட்டனர்.

  ஆடம்பரமாக சுயநலத்துடன் வாழ்க்கை வாழ்ந்த இளைஞர்கள் தங்கள் சேமிப்பை இழந்தார்கள். அவர்கள் தம் ஆடம்பரம் தொடர உலகமயமாக்களின் விளைவாக வெளி நாட்டு மற்றும் உள்நாட்டு தனியார் வங்கிகள் செயல்பட துவங்கியது. வங்கிகள் பணம் காய்க்கும் மரங்களான இளைஞர்களைக் குறிவைத்து ஆடம்பர வாழ்க்கை வாழ வங்கிக் கடன் அட்டைகள் மூலம் தாராளமாக கடன் வழங்கியது. இளைஞர்களின் வருவாய் அவர்களை அறியாமலேயே வட்டியாகவும் தேவையற்ற வழிகளில் கொள்ளையடிக்கப்பட்டது.

  பெரும்பான்மையான இளைஞர்கள் கடனாளியாக வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டது. ஆம் வலை விரித்து இளைஞர்களின் சேமிப்பை உழைப்பை தன சுய சிந்தனையை இழந்து ஒரு மாய வாழ்க்கைக்கு வசியப்படுத்தப் பட்டார்கள்.
  இளைஞர்களின் சிந்தனை செயல் முழுவதும் சம்பாதிப்பதும் கடனை அடைப்பதற்கும் தன மனைவி மக்கள் என்று குடும்பத்தைக் காக்கப் போராடுவதும் தான் ஏற்கனவே பழகிவிட்ட ஆடம்பர வாழ்க்கை வாழவும் செலவிடப்படுகிறது. தன் அன்றாடத் தேவை பிரச்சனைகள் சந்திக்கும் பெரும்பான்மை இளைஞர்களால் சமூகம் பற்றி சிந்திக்கும் திறன் இல்லாத நிலையில் உள்ளார்கள்.

  அனைவரும் உணர்கிறார்கள் ஆனால் தனக்காக ஒருவர் சென்றால் நல்லது என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது. தன்னுடைய வீட்டில் மின்தடை என்றால் கூட பக்கத்து வீட்டில் வசிப்பவர் புகார் செய்வார் நாம் நம் வேலையைப் பார்ப்போம் என்ற மனமே பெரும்பான்மையானவர்களுக்கு உள்ளது.

  இந்தியன் குரல் உதவிமையத்தில் தகவல் பெரும் உரிமை சட்டம் மூலம் தங்களது தனிப்பட்ட பிரச்சனைகளான குடும்ப அட்டை பெற, பட்டா சிட்டா பெற, கல்விக்கடன் பெற, முத்யோர் ஓய்வூதியம் கைம்பெண்கள் மறுவாழ்வு திட்டம் படித்த பெண்களுக்கான உதவிகள் போன்ற அனைத்து பயன்களையும் பெற ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மனுக்களை யாரிடம் அளிக்க வேண்டும் புகார்களை யாரிடம் எப்படித் தரவேண்டும் அலுவலக நடைமுறைகள் என்ன அரசின் நலத்திட்டன்களைப் பெறுவது எப்படி இலஞ்சம் கொடுக்காமல் அரசு திட்டங்களைப் பெறுவது எப்படி என்று தமிழகம் முழுவதும் பயிற்சி அளித்து வருகிறோம் இதற்க்கு கட்டமாம் எதுவும் நாங்கள் வாங்குவதில்லை நன்கொடை பெறுவதில்லை இதை எங்கள் சந்தோசத்தோடு சேவையாக செய்துவருகிறோம் ஆனால் எங்கள் உதவி மையங்களில் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி வருபவர்கள் அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க உதவுங்கள் நீங்கள் சொல்வது போல் செய்கிறோம் என்று முதலில் சொல்வதில் எங்களுக்கு இந்த பிரச்னையை தீர்த்துக் கொடுங்கள் என்று தான் கேட்கிறார்கள். அவர்களின் பிரச்சனை தீர்க்கக் கூட அவர்கள் போராட தயாரில்லாமல் யாராவது தீர்த்துக் கொடுத்தால் நல்லது என்ற எண்ணத்திலேயே உதவிகேட்டு வருகிறார்கள். இதுதான் எண்களின் அனுபவம் நாங்கள் அவர்களிடம் பேசி உங்கள் பிரச்னைக்கு நீங்கள் தான் செயல்பட வேண்டும் என்று புரிய வைத்து உதவி சிக்கிம். இது தான் இன்றைய இளைஞர்களின் நிலை.............................................தொடரும்

  என்ன நண்பர்களே உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் மீண்டும் தொடரும்

  பதிவைப் பகிர
  Posted by Bala subramanian

  ReplyDelete

நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.

கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.

சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.