23 Jul 2012

ஆட்சி முறை - ஒரு உருவகம்

மேற்கண்ட படங்களைக் கூர்ந்து கவனியுங்கள்.

தாயை அரசாகவும், பிள்ளையைக் குடிமக்களாவும், பையை நாட்டின் சுமையாகவும் (குடிமக்களின் சுமையாகவும்) உருவகித்துப் பாருங்கள்.

16 Jul 2012

வளையுமா பகுத்தறிவு நாவு?

        நக்கீரன் இதழில் திரு.சுப.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய "இளமை எனும் பூங்காற்று" தொடரின் 26வது கட்டுரை "அழகின் மறுபெயர்'' படித்தேன். அது ஏழாம் கிளியோபாத்ரா பற்றிய ஒரு கட்டுரையாகும்.
        ஆரம்ப வரியிலேயே சிந்திக்கத்தான் வைக்கிறார் பகுத்தறிவுக்காரர், 
"தாய்வழிச் சமூகமாக இருந்த வாழ்க்கை முறை மாறிப்போன பிறகு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண்களின் ஆதிக்கமே உலகில் நிலைத்து நிற்கிறது என்று ஆரம்பிக்கிறார்.''
        தாய் வழிச்சமூகம் என்கிறீர்களே, அது எப்போது இருந்தது. அதை நிரூபிக்க ஏதாவது ஆய்வின் பலம் உங்களுக்கு இருக்கிறதா? "வால்காவிலிருந்து கங்கை வரை'' என்று முழுக்க முழுக்க கற்பனையினாலான ஒரு புத்தகம்தான் ஆதாரமா? (அதையே ஆய்வுப் புத்தகம்தான் என்கிறார்கள்.) அதேபோன்று Fiction வகை சார்ந்த இலக்கியங்கள்தான் ஆதாரமா? அல்லது உண்மையிலேயே ஏதாவது வரலாற்று ஆதாரம் உள்ளதா? எனக்குத் தெரியவில்லை. சரி அப்படியே இருந்தாலும் சமுதாயத்தின் முன்னகர்வில்தான் ஆணாதிக்கம் பிறந்திருக்கிறது (ஆணாதிக்கம் முற்போக்குதான்) என்பதையாவது ஒப்புக் கொள்ள வேண்டும். அதையும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இது பிற்போக்கு கருத்து என்பார்கள்.

8 Jul 2012

நம்பர் ஒன் சீனாதான்

"முதலாளித்துவ"த்தினால் ஏற்படும் அவலங்கள் என்று கம்யூனிஸ்ட் தோழர்கள் சொல்வார்களே அதே அவலங்கள் கம்யூனிசப் பொன்னுலகம் என்று கூறப்படும் சீனாவிலும் அரங்கேறி வருகின்றன.

உலக உற்பத்தியில், போலித் தயாரிப்புகளில் நம்பர் ஒன் நாடு சீனாதான், மனித உரிமை மீறலில் நம்பர் ஒன் நாடு சீனாதான், லாபம் ஈட்டும் தொழில்கள் என்ன என்ன உண்டோ அனைத்திலும் சீனாதான் நம்பர் ஒன். பொன்னுலகில் சுரண்டலே இருக்காது என்கிறார்கள். வங்கிகள் லாபம் ஈட்டுவதில் சீனாதான நம்பர் ஒன். லாபம் என்பது சுரண்டலில்லையா? கேட்டால் பாட்டாளிகளின் அரசு முதலாளிகளைத் தானேச் சுரண்டுகிறது என்பார்கள். சீன முதலாளிகளும் மக்கள் சீனத்தின் அங்கம்தானே. மக்கள் சீனம் தன் மக்களையும் சுரண்டுகிறது. உலகத்தையும் சுரண்டுகிறது. பொதுவுடைமை அரசு என்றுக் கூறிக்கொண்டு அதிபயங்கர முதலாளித்துவ நாடாகத்தான் மக்கள் சீனம் இருக்கிறது. முதலாளித்துவத்தின் பயங்கரம், நிலவுடைமை அரசுகளின் பயங்கரம், இராணுவ ஆட்சியின் பயங்கரம் என அனைத்துப் பயங்கரங்களின் மொத்தக் கலைவையாக அல்லவா மக்கள் சீன அரசு இருக்கிறது.

7 Jul 2012

கேள்விக்கு கேள்வி = பகுத்தறிவு!

அண்ணா பார்வையில் ஆரிய திராவிடம் என்று ஒரு பதிவை தமிழ் ஓவியா என்ற வலைப்பூவில் கண்டேன். திராவிட நாடு இதழில் அண்ணா எழுதிய உரைகளை சிலவறைக் கொடுத்துவிட்டு சம்பந்தமேயில்லாமல், கீழே கண்டிருக்கும் "ஹிக்ஸ் போஸான்" துகள் பற்றியும் மறுமொழியாக இட்டிருந்தார்கள். நான் சில மறுமொழிகளை அவர்களுக்கு கொடுத்திருந்தேன். "ஹிக்ஸ் போஸான்" மறுமொழியையும், அதற்கு நான் கொடுத்திருந்த மறுமொழிகளையும், பதிலுக்கு அவர்கள் இட்டிருந்த மறுமொழிகளையும் தொகுத்து கீழே கொடுத்திருக்கிறேன்.

நான் அவர்களிடம் தோற்றுவிட்டேன். என்ன சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. கேள்விக்கு கேள்வியையே பதிலாக சொல்கிறார்கள். ஒரு பதிவு இட்டுவிட்டால், வாசகர் கேள்வி கேட்பார், பதிவை இட்டவர் பதில் தருவார் என்று நினைத்திருந்தேன். ஆனால் வாசகரைத்தான் பதில் கேள்வி கேட்கிறார்கள். ஒரு வேளை அவர்களது மொழி எனக்குப் புரியவில்லையோ அல்லது எனக்கு அவர்கள் அளவு பகுத்தறிவு இல்லையோ என்னவோ? எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அவர்களுக்குச் சரிசமாமாக பேசக்கூடிய யாராவது, முடிந்தால் அந்தத் வலைப்பூவிற்குச் சென்று முயற்சித்துப் பாருங்கள்.

அவர்கள் இட்டிருந்த பதிவின் கீழ் இருந்த மறுமொழியும் அதைத் தொடர்ந்து நடந்த விவாதங்களும் இதோ

6 Jul 2012

கடவுளா? துகளா?

கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டது என்று செய்தி வந்ததுதான் தாமதம்

ஒரு சாரார் கடவுளைக் கண்டுபிடித்துவிட்டனர் என்று கூறுகின்றனர். ஒரு சாரார் கடவுள் துகள் பிரபஞ்ச ஊழல் என்கின்றனர்.

"என்னதாண்டா இது" என்று கூகுளில் தேடியதில் கிடைத்த தகவல்களைக் கீழே பெட்டிகளாகத் தந்திருக்கிறேன்.

அதில் பரிதி முத்தரசன் என்பவர் கடவுள் துகள் - பிரபஞ்ச ஊழலைப் பற்றி எழுதியிருக்கிறார்.

ஒரு பெரிய கண்டுபிடிப்பு, அதை உலக சமுதாயத்தின் முன்னகர்வாகக் கருதாமல், இவர் போன்ற முற்போக்குவாதிகளுக்கு ஒரு சாதனை எப்படிப் படுகிறது என்பதைப் பாருங்கள். விஞ்ஞானிகளின் அறிவியல் கண்டுபிடிப்பில் என்ன குறைகண்டுவிட்டார் இவர் என்கிறீர்களா?

5 Jul 2012

கடவுள் என்ன காட்சிப் பொருளா?


இந்தப் பதிவை இடும் முன், நான் எந்த அமைப்பையும் சார்ந்தவனல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் பகுதியில் உள்ள இந்து முன்னணி அமைப்பினருக்கு நான் கீழ்கண்ட துண்டறிக்கையைத் தட்டச்சு செய்து கொடுத்தேன். அந்தத் துண்டறிக்கையில் உள்ள கோரிக்கைகள் நியாயமானதாக எனக்குப் பட்டது ஆகவே, அந்த அமைப்பினரிடம் அனுமதி பெற்று அந்தத் துண்டறிக்கையைக் கீழ்கண்ட பதிவாக இடுகிறேன்.

3 Jul 2012

மாதா, பிதா, குரு

என் தந்தை ஒரு ஆசிரியர். அவர் எனக்கு வகுப்பாசிரியராகவும் இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் என் தந்தையிடம் வரும் மாணவர்களின் பெற்றோர் பிள்ளைகள் படிக்கவில்லை என்றால் "சார் கண்ணை மட்டும் விட்டுவிடுங்கள் சார். தோல உரிச்சிடுங்க. என் பிள்ளைய படிக்க வைக்க நீங்க என்ன பண்ணினாலும் கேட்க மாட்டேன் சார்." என்று சொல்வார்கள்.

இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது.

பிள்ளைகளுக்கு ஆசிரியர் என்றால் மதிப்பு வரும்படி பெற்றோர்களே நடந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். பள்ளியில் பாடத்தைக் கவனிக்காத மாணவனை ஆசிரியர் கண்டித்தால், அன்று மாலையே "என் பிள்ளை அப்படித்தான் செய்வான். நீதான் அவனுக்குப் புரியும்படிச் சொல்லிக் கொடுக்க வேண்டும்" என்று கேட்கும் பெற்றோர்கள் அதிகரித்து விட்டார்கள். ஆசிரியரை ஒருமையில் அழைக்கும் பழக்கமும் அதிகரித்துவிட்டது.

மன்னாராட்சியில், நிலவுடைமைச் சமுதாயத்தில், மொகலாய அரசாட்சியில், ஆங்கில அரசாட்சியில் ஆசிரியர்களுக்கு இருந்த மரியாதையில் பாதிகூட மக்களாட்சியில் இல்லை. இன்னும் ஜனநாயகத்தைவிட சோசலிசம், கம்யூனிசம் எல்லாம் வேறு இருக்கிறது என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலெல்லாம் ஆசிரியர்கள் நிலை என்ன ஆகுமோ தெரியவிலை.

1 Jul 2012

நான் இந்துவா?

"என்னடா பேரு இது மாடசாமி, குப்புசாமினு? ஸ்டைலா ராபர்ட், ரிச்சர்ட்னு வச்சா எப்படி இருக்கும்? இந்த மாதிரி பேருலாம் வச்சிருந்தா எந்தப் பொண்ணுதாண்டா ஒன்னத் திரும்பிப் பாக்கும்'' கோபமாகக் கேட்டான் பீட்டர்.

"டே நேத்து வரைக்கும் நீயே தண்டபாணிதான். இன்னிக்கு பீட்டர்னு பேர் மாத்திட்டா ஆச்சா?" என்றான் மாடசாமி

"நாங்கதான் மதம் மாறிட்டம்ல. எங்க சர்ச்ல இந்தப் பேரு கொடுத்தாங்க, இனி என்னை ஸ்டைலா பீட்டர்னே கூப்பிடு''

"ஏன்டா இவ்வளவுநாளா தண்டபாணின்னு கூப்பிட்டுட்டு, இப்படி திடீர்னு மாத்துணா எப்படிடா கூப்பிடுறது? என்னால முடியாது''

"உனக்கு பொறாமைடா அதான் மாட்டேன்ற, வேணும்னா நீயும் மதம் மாறி பேர மாத்திக்கோ. இதுக்குப் போயி ரொம்பதா அள்ட்ற"