17 Mar 2012

நவீனத் தீண்டாமை - உதாரணம்


       எனது நண்பர் ஒருவர் அச்சக முகவராக இருக்கிறார். நான் ஒரு டிடிபி ஆப்பரேட்டர். அவருக்கு பல பள்ளிகளில் இருந்து ஆர்டர்கள் வரும். அந்த வேலைகளை எல்லாம் நான் டிடிபி செய்து கொடுப்பேன்.
       ஒரு நாள் அவர் ஒரு ரசீதை என்னிடம் காண்பித்தார். அது அவருக்குப் போட்டியாக அவர் ஆர்டர் எடுக்கும் பள்ளிக்கு ஒரு அச்சகம் கொடுத்திருந்த கொட்டேஷன். அதை பள்ளி நிர்வாகம் அவருக்குக் கொடுத்திருக்கிறது. ''அந்த கொட்டேஷனுக்கு போட்டியாக விலை நிர்ணயம் செய்து என் லெட்டர்பேடில் ஒரு டிடிபி எடுக்க வேண்டும்'' என்று கொடுத்தார்.
       அந்த ரசீதின் இடது ஓரத்தில் ஒரு பிள்ளையார் படம். அந்த பிள்ளையார் படம் பேனாவால் (அது என்ன படம் என்றே தெரியாத அளவுக்கு) நன்றாக கிறுக்கப்பட்டிருந்தது. நான் "என்ன இது'' என்று அந்த நண்பரிடம் காண்பித்துக் கேட்டேன்.
       அதற்கு அந்த நண்பர் "அந்த பள்ளி ஒரு கிறிஸ்தவ பள்ளி, இந்துக் கடவுள் படங்களை அவர்கள் வெறுப்பார்கள். அதன் அடையாளம் தான் இது. அவ்வளவு சகிப்புத்தன்மை அவர்களுக்கு'' என்றார்.

5 comments:

 1. மனிதனையே தீண்டத்தகாதவனாக நினைத்து, அவனையை அழித்த (எரித்த) சம்பவங்கள் நடந்துள்ள மதத்தின் புகைப்படத்தை, தீண்டத்தகாததாக எண்ணுவது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமில்லையே நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே!

   நீங்கள் கிறிஸ்தவத்திலும் (இந்துக்கள் புனிதமாக நினைக்கும் ஒன்றின் மீது) தீண்டாமை இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டதற்கு நன்றி!

   ("மனிதனையே தீண்டத்தகாதவனாக நினைத்து, அவனையை அழித்த (எரித்த) சம்பவங்கள் நடந்துள்ள மதத்தின் புகைப்படத்தை, தீண்டத்தகாததாக எண்ணுவது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமில்லையே" என்று எவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டீர்கள். இங்கு நடந்திருப்பது சிலதான். ஆனால் அக்கரைச்சீமைகளின் சிலுவைப் போர்களைச் சற்று சிந்தித்துப்பாருங்கள். கிறிஸ்தவர்களாக மறுத்தவர்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள். ஒன்றா? இரண்டா? கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டார்கள். (அங்கு மனிதனை தெய்வமாகப் பார்த்து எரித்தார்களோ?) இவற்றையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு எழுதிவிட்டீர்கள். சரி! உங்கள் பார்வை அது). அதே சமயம், நாகர்கோவில் போன்ற தென்மாவட்டங்களில் பரவலாகத் திருச்சபைகளில் நடக்கும் சாதிக் கொடுமைகளைப் பற்றியும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். கிறிஸ்தவராகிவிட்ட பிறகு ஏன் சாதி பார்க்க வேண்டும். அடுத்தவன் முதுகில் கரி இருப்பது உங்களுக்கு நன்றாகத் தெரிகிறது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதே சமயம் உங்கள் முதுகிலும் கரி இருக்கிறதே.)

   "நான் இவ்வகை தீண்டாமையை ஆதரிக்கிறேன்" என்று உங்களைப் போன்றோர் சொல்வது அவ்வளவு பெருமைக்குரிய விஷயமாக எனக்குத் தெரியவில்லை (சரி அது உங்கள் பாடு).

   கிறுக்கிய அந்த மனிதன் இந்து கடவுள் சின்னம் உபயோகப்படுத்தும் உங்களுக்கெல்லாம் வேலை கொடுக்க முடியாது என்று தெளிவாகச் சொல்லி இருக்கலாமே! அந்த முகவர் அங்கு சென்று இருக்க மாட்டாரே!

   நினைத்துப் பாருங்கள் நண்பரே!
   மக்களாட்சியின் உச்சத்தில் இருக்கும் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற தேசங்களில்கூட சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்த ஒரு இந்துவோ அல்லது ஒரு இஸ்லாமியரோ, அல்லது ஒரு யூதரோ, ஒரு பெரிய வணிக நிறுவனம் நடத்தி, அங்கே அவருக்கு வரும் கொடேசனில் இருக்கும் இயேசு படத்தை கிறுக்கி, வந்தவர் கையில் கொடுத்திருந்தால், அங்கு சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்த அந்த மனிதனின் நிலை என்னவென்று சிந்தியுங்கள்.

   Delete
 2. அரசன்.... உங்கள் கிருக்கல்கள் அனைத்தும் காவி நிறத்துடன் காணப்படுகிறது, அது தற்செயலாக நடந்தது அல்ல என்பது உங்களுக்கு தெரியும். தொடருங்கள்!!!!

  ReplyDelete
  Replies
  1. தோழரே! நீங்கள் சிவப்புக்கண்ணாடி அணிந்து பார்த்தால் நல்லது காவியாகத்தான் தெரியும், நல்லது அல்லது சிவப்பாகவும் நிறமற்றதாகவும் தெரியும்.

   Delete
 3. அரசன்
  கிறிஸ்தவ மத வெறி எந்த அளவுக்கு பரவியிருக்கிறது என்று உங்களுக்கு தெரியாது. ஆர்சி பள்ளிக்கூடத்தில் பிராட்டஸ்டண்ட் வாத்தியார் ஆக முடியாது. இவர்கள் சொல்லும் அன்பு, சகோதரத்துவம் எல்லாம் வார்த்தையோடு சரி. செயலில் எதிர்மாறாகத்தான் இருப்பர். டயோசீசன் தேர்தல்களில் இவர்களின் கொலை வெறி தெரியும். ஆனால் கிறிஸ்தவம் அன்புமதம் என்று நீங்கள் நம்ப வேண்டும்.

  ReplyDelete

நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.

கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.

சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.